ताज़ा ख़बरें

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்…

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்…

26.12.2024 திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூமணி(24) பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன்,நீதிமன்ற தலைமை காவலர் நாகலட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் (26.12.2024) இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி பூமணிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்தாண்டு இதுவரை 74 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

Show More
Back to top button
error: Content is protected !!